25 ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ ?
தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ பதவியேற்கவுள்ளார்.
மேஜர் ஜெனரல் ரொட்ரிக்கோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (30) வெளியாகுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி வருகிறார்.
அவர் முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply