உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது
நாட்டில் சில பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளதாரா பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை,கிரிபாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்பாலுவ பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply