கிளிநொச்சியில் நடந்து சென்ற குடும்பஸ்தரை மோதிய பேருந்து :பரிதாபமாக உயிரிழப்பு
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பரந்தன் காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து பரந்தன் பக்கம் நடந்து சென்றவரை, அதே திசையில் வந்த தனியார் பேருந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply