அர்ச்சுனா எம்.பி. மீது தாக்குதலா?
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாக கூறி, இருவர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் தான் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (11) குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இரு தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply