28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,
மேலும் 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றத்துடன் புதிய பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்குரிய பதில் கடமைகளை ஆற்றுவதற்குக் குறித்த 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply