சுமந்திரனுக்கு எதிராக NPP முறைப்பாடு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். எம்.ஏ.சுமந்திரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலனை, அச்சுறுத்தும் வகையில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரனால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அவர் இந்த முறைப்பாட்டை நேற்று (04) பதிவுசெய்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply