20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்தி உள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று (06) காலை 7.40 மணியளவில் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 20 ஆவது வெசாக் தின நிகழ்வில் பிரதான உரையை நிகழ்த்தி உள்ளார்.
இந்த உரை இன்று உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் மாலை 5:00 மணிக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“மனித கண்ணியத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் சகிப்புத்தன்மை, உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த புரிதல்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் வெசாக் கொண்டாட்டம் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளது.
இலங்கை, இந்தியா, நேபாளம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகள் உட்பட சுமார் 2,800 பேர் இதில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply