பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 4,622 பொசன் தானங்கள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் யலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

ஜூன் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை பொசன் பௌர்ணமி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொசன் தானங்களை சோதனை செய்யும் பணிகளில் சுமார் 2 ஆயிரம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகளவிலான பொசன் தானங்கள் அநுராதபுரம்,பொலன்னறுவை, குருணாகல் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் பொசன் தானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் யலாளர் சமில் முத்துகுட மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply