ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள்
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதிகாலை 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.82 டிகிரி
கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக அதிகாலை 12.56 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply