மட்டக்களப்பில் கோர விபத்து தலைகீழாக கவிழ்ந்த வேன்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வேன் இன்று காலை தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள நீரோடையில் கவிழ்ந்துள்ளது.
கொழும்பு பகுதியில் இருந்து வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனைப் பகுதியை நோக்கி வந்த வேன் ஒன்றே இவ்வாறு தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேனில் பயணித்தவர்கள் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply