குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ரணில் இன்று முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றையதினம்(11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

மருந்து இறக்குமதி தொடர்பாக கெஹலிய ரம்புக்வெல்ல முன்னதாக CIDயில் முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்தப் முறைப்பாடுடன் தொடர்புடைய விசாரணைகளின் கீழ், கடந்த அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஏற்கனவே CIDயில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டு பொறுப்பிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply