ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் இந்தியா ஒரு நட்பு நாடாக இருக்கும் : பிரதமர் மோடி

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் தளத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“ஈரான் ஜனாதிபதி பெசேகியுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்களுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தோம். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முன்னோக்கி செல்லும் வழியாக, உடனடியாக பதற்றத்தைக் குறைத்தல், உரையாடல் மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றுக்கான எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினோம்.”

45 நிமிட உரையாடலில், ஈரான் அதிபர் பெசேகி, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்ததோடு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் இந்தியா ஒரு நட்பு நாடாகவும் நண்பனாகவும் இருப்பதாகக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply