அதிகாரத்துக்காக கள்வர்கள் என விமர்சித்தவர்களுடனேயே கூட்டணி அநுர கட்சியை விமர்சித்த:சமிந்த விஜேசிறி
இந்த அரசாங்கமும் பாரம்பரிய அரசியலிலேயே ஈடுபடுகிறது. அதிகாரத்துக்காக கள்வர்கள் என விமர்சித்தவர்களுடனேயே கூட்டணியமைத்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.களுத்துறையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
70 ஆண்டுகள் நாட்டுக்கு சாபம் எனக் கூறியவர்களுடன் இணைந்து இன்று இந்த அரசாங்கம் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைத்திருக்கிறது.
அதிகாரத்துக்காக கள்வர்கள் என விமர்சித்தவர்களுடன் இந்த அரசாங்கம் கூட்டணியமைத்துள்ளது. புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அரசாங்கம் ஏமாற்றத்தையே வழங்கியிருக்கிறது.
கடந்த அரசாங்களின் ஊழல், மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பி.யினர் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் உப்பு மோசடி, அரிசி மோசடி என்பன இடம்பெற்றுள்ளன.
மோசடிகளைக் கட்டுப்படுத்தி அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் இன்று முன்னர் காணப்பட்டதை விட உணவு பொருட்களின் விலைகளை பன் மடங்கு அதிகரித்திருக்கின்றது.
கெஹெலிய ரம்புக்வெல்லவை காண்பித்து ஊடக பிரசாரங்களை முன்னெடுத்து, ஏனைய பிரச்சினைகளை மறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply