பலத்த காற்றில் சிக்கி காணாமல் போன மீனவர்

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் பயணித்த ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார். விபத்தில் சிக்கிய படகில் 6 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதி புறப்பட்ட குறித்த படகானது, இன்று மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது பேருவளை கடலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காணாமல் போன நபர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply