பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (20) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) காலை 10.00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சியால், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஒரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply