ஐரோப்பிய நாடொன்றில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறை இலங்கையர் மீது குற்றச்சாட்டு

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 37 வயதான தினிர லியனகே என்பரே இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி வரை பல்வேறு பாலியல் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறுமிகளை சந்தித்தல், பாலியல் தொடர்புகள் மற்றும் பாலியல் தூண்டுதல்களை ஏற்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதோடு பல சிறுமிகளுக்கு கவர்ச்சிகரமான பொருட்களை வழங்கியும் பெறுமிவாய்ந்த இனிப்பான உணவுகளை வழங்கியுடம் குறித்த நபர் சிறுமிகளுடன் பாலியல் உறவுகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த இலங்கையர் மீதான வழக்கு அண்மையில் கொலரைன் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிணை மனுவிற்காக வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரியதை தொடர்ந்து, நீதிபதி வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply