‘செம்மணி’ நூல் வெளியீடு மற்றும் இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மனித புதைக் குழிகள் குறித்து கலந்துரையாடல் இன்று

சுயாதீன ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரதெர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோரின் படைப்பிலான ‘செம்மணி’ நூல் வெளியீடு ‘இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் மனித புதைக் குழிகள்’ என்ற கலந்துரையாடலுடன் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த நூல் வெளியீடு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை அரங்கில் நடைபெறவுள்ளது.
இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டிலான கலந்துரையாடலில் சட்டத்தரணி ரனித்தா ஞாணராஜா, பிரிட்டோ பெர்ணான்டோ,ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,ஊடகவியலாளர் சகுண எம்.கமகே மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோர் பங்குப்பற்றவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply