ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு : வௌியான மேலதிக தகவல்கள்
ஹங்வெல்ல, துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் துன்னான பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இன்னும் வெளியாகவில்லை, மேலும் ஹங்வெல்ல பொலிஸ் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply