நல்லூரில் வாள்வெட்டு தாக்குதல் : ஐவர் கைது
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் இன்றிரவு பொதுமகன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட குழுவினால் குறித்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பொதுமகன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply