மணல் அகழ்வு விதிமுறைகளை மீறிய உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த உழவு இயந்திரம் ஒன்று நேற்று மாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிக் கொண்டு சென்ற குறித்த உழவு இயந்திரத்தை கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் வழிமறித்து கைப்பற்றியுள்ளனர்.

தற்போது குறித்த உழவு இயந்திரம் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply