நாமலின் கருத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு, சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆய்வாளர் ருவன்பத்திரன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணமலாக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புள்ள குடும்பத்தவர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிடுவது பொருத்தமானதல்ல.
ராஜபக்க்ஷக்களால் கொல்லப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவரும் இல்லாதிருந்திருந்தால்,நாமலின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் எனும் வாதம் செல்லுபடியாகியிருக்கும். சந்தர்ப்பத்தை சாதமாகப் பயன்படுத்தி தெற்கில் இனவாதத்தை தூண்டும் ஒரு சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்த நாமல்ராஜபக்ஷ முனைவதும் அவர்களது கடந்தகால அரசியலின் கடும்போக்கையே காட்டுவதாகவும் சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply