அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்த டொலர் பிணைமுறிகள்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டில் டொலர் பிணைமுறிகளை வெளியிடுவதற்கும், ஏற்றுமதி வருமானம் மீளமைத்தல் விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வர்த்தக வங்கிகள் வசமுள்ள டொலர் கையிருப்பை அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவதுடன், நாட்டின் நிதி நிலைத்தன்மையை பேணவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில்,

லோரன்ஸ் செல்வநாயகம் கடந்த வருடம் ஒக்டோபர் 13 ஆம் திகதி பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில், உள்நாட்டு வெளிநாட்டு நாணயக் கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. அரசாங்கத்தின் இந்த டொலர் பிணைமுறிகளுக்கான தேவையினை அதிகரிக்கவும், அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி நிதியினை உள்நாட்டு டொலர் பிணைமுறிகளாக பல்வகைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கிணங்க மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஏற்றுமதி வருவாயை மீளமைத்தல் தொடர்பான விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2026 ஜனவரி 30 ஆம் திகதி அவை இறுதி செய்யப்பட்டன.

நிதியமைச்சரான ஜனாதிபதியினால் இதற்கான பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வர்த்தக வங்கிகள் வசமுள்ள டொலர் கையிருப்பை அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவதுடன், நாட்டின் நிதி நிலைத்தன்மையை பேணவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply