ஈரான் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 254 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்

ஈரான் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் நேற்று லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 254 பேர் பலியானார்கள். ஈரானுடனான போரை இரண்டு வார காலத்துக்கு நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் போர் நிறுத்தத்தை உறுதிபடுத்தினார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் குழு நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லெபனானுக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் தொடர்பில்லை என்றும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். அதன்படியே வெறும் 10 நிமிட இடைவெளியில் 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் லெபானை தாக்கியுள்ளது. இதில் 254 பேர் கொல்லப்பட்டனர். 1,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்கள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கான தேடுதல் பணிகளும் நடந்து வருகிறது.

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் இல்லை என சொல்லியே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாகவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. முதலில் நடந்த தாக்குதல் சைடா நகரின் ஒரு கஃபேயை தாக்கியது. அதில் 8 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். மற்றொரு ஏவுகணை பால்பெக்கில் இறுதி சடங்கில் நடந்த இடத்தை தாக்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply