அமெரிக்காவுடன் விளையாடாதீர்கள்: ஈரானுக்கு துணை அதிபர் வான்ஸ் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற இருந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துவதால் அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை அமெரிக்கா கட்டுப்படுத்தாவிட்டால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகப்போவதாக ஈரான் அறிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுடன் ஈரான் விளையாட வேண்டாம் என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் எச்சரித்தார்.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் 38 நாட்களாக தீவிர தாக்குதலை நடத்தின. போர் மூண்டதும், வளைகுடா நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் டேங்கர் கப்பல்கள் பயன்படுத்தும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்ததோடு, பல நாடுகளில் எரிபொருள், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தம் காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், 10 அம்ச அமைதி திட்டத்தை பரிசீலிக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எனினும் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனான் நாட்டுக்கும் பொருந்துமா என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply