அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழுஉருவ சிலை திறப்பு
அமெரிக்காவில் முதல் முறையாக சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சியாட்டில் நகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிலையை, மாநகர மேயர் கேட்டி வில்சன் மற்றும் இந்தியத் துணைத் தூதர் பிரகாஷ் குப்தா ஆகியோர் திறந்து வைத்தனர்.
தினமும் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட, நகரின் மிகவும் பரபரப்பான பொது இடங்களில் ஒன்றான வெஸ்ட்லேக் சதுக்கம், அமேசான் தலைமையகம் மற்றும் சியாட்டில் மாநாட்டு மையம் போன்ற முக்கிய இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply