30 நாளில் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு ஈரானின் புதிய போர் நிறுத்த திட்டம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலனை
அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் கடும் இழுபறி நிலை நிலவி வருகிறது. ஈரானின் முந்தைய திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்த நிலையில், புதிதாக 14 அம்ச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பி வைத்துள்ளது. இந்த புதிய திட்டம் அமெரிக்காவின் 9 அம்ச திட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக இருப்பதாக ஈரானின் தஸ்னிம், பார்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா 2 மாத கால போர்நிறுத்தத்தைக் கோரியதாகவும், ஆனால் ஈரானியர்கள் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்குப் பதிலாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் 14 அம்ச திட்டம் குறித்து ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய திட்டத்தில், அனைத்துப் பிரச்னைகளும் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எதிர்கால தாக்குதல்களுக்கு எதிரான உத்தரவாதங்கள், ஈரானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் தடைகளை நீக்குதல், போர் இழப்பீடுகள், லெபனான் உட்பட அனைத்துப் போர் நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருதல், மற்றும் ஹார்முஸ் ஜலசந்திக்கான புதிய செயல்முறை ஆகியவற்றை இந்தத் திட்டம் கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply