ஓமன் வளைகுடாவில் பதற்றம: ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க படைகள் துப்பாக்கிசூடு

ஓமன் வளைகுடாவில் அமெரிக்காவின் தடையை மீற முயன்ற ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த மாதம் 8ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில் ஓமன் வளைகுடாவில் கடல்வழித் தடையை மீறி ஈரானியத் துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற இரண்டு ஈரானிய எண்ணெய் டாங்கர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா விதித்த தடைகளை மீறி ஈரான் துறைமுகத்தை நோக்கி அந்த கப்பல்கள் சென்றது. அப்போது கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் துப்பாக்கிசூடு நடத்தியது என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply