தவெக அமைச்சரவையில் 2 இடங்கள் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு உள்ளோம்: செல்வப்பெருந்தகை பேட்டி
தவெக அமைச்சரவையில் 2 இடங்கள், 1 மாநிலங்களவை உறுப்பினர் வேண்டும் என கேட்டு உள்ளோம். என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எங்கள் போராட்டத்திற்கும், கூட்டணித் தலைவர்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்து, ஆளுநர் தற்போது தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். ஆளுநரின் நடவடிக்கைகளில் பாஜவின் தலையீடு இருந்ததால் ஆட்சியமைப்பதில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சிகளின் முதுகில் குத்திவிட்டதாகக் திமுகவால் கூறப்படும் விமர்சனங்களில் எவ்வித உண்மையும் இல்லை. சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கொள்கை மற்றும் தேச நலன் அடிப்படையில் முடிவுகளை எடுத்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இதில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதுதான் கூட்டணிக்கான அறம். சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் நிபந்தனையற்ற வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply