தவெக ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் யாருக்கும் தனி பெரும்பாண்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திமுக கூட்டணி சார்பில் 2 முறையும், காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்டு 3 முறையும் என தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று, தற்போதும் மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply