ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று கடற்படை கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இடைமறித்து தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து பதிலடி கொடுத்தாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஐக்கிய அரபு அமீரகமும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன்கள் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து இடைமறிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குறிப்பிட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் பரிசீலித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply