தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு விழா தொடங்கியது
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று (மே 21) காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக பதவியேற்க உள்ள 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் இதுவரை 33 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அதைத் தொடர்ந்து சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கடரமணன், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எனினும், மீதமுள்ள பல துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று (மே 21) காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. ஏற்கனவே விஜய் பதவியேற்பு விழாவிலும் வந்தே மாதரம் முதலில் பாடியது சர்ச்சையானது. இனி தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும் என் அரசு கூறிய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம்இடம். சர்ச்சைக்கு பின்னர் இம்முறையும் வந்தே மாதரத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply