தேர்தலின் பின் அனைத்து கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை: ஜனாதிபதி

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பொதுத்தேர்தலின் பின்னர் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் சகல கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துப் பேச்சு நடத்துவேன். தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கு கொள்வார்கள். தமிழ், முஸ்லிம் தலைவர்களை அழைத்துப் பேசுவதற்கு கூடுமானவரை முயற்சி செய்திருக்கிறேன்.பிரபாகரன் இருக்கும் வரை அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது காலம் கனிந்திருக்கிறது. நான் ஜனாதிபதி என்ற வகையில் அவ ர்கள் என்னோடு பேசவேண்டும். என்னோடு அவர்களுக்கு பேச முடியாது விட்டால், புதிய தலைவர்களுடன் நான் பேசுவேன்.

13 வது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அது ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பொலிஸ் அதிகாரங்களைத் தவிர அனைத்தும் அமுலிலுள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன். இப்போது நிவாரணக் கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் பேரே இருக்கின்றனரென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply