இன்று லியன் பஸ்கோ இலங்கைக்கு வருகிறார்
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலர் லியன் பஸ்கோ இலங்கைக்கு இன்று இரவு வரவுள்ளார். அவர் இரு நாட்கள் இலங்கையில் தங்கி இருப்பார். லியன் பஸ்கோ இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட அரசுத் தரப்புப் பிரமுகர்களையும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள்,தமிழ் தலைவர்கள்,ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரை நேரில் சந்தித்து அரசியல் நல்லிணக்கம், மனித உரிமைகள், அகதிகள் மீள் குடியேற்றம் ஆகியன சம்பந்தமாகப் பேசுவார் என்று ஐ.நா அறிவித்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் ஐ.நா.சபைத் தலைவர் பான் கீ மூன் இலங்கை வந்திருந்தார். அப்போது அரசியல் நல்லிணக்கம், மனித உரிமைகள், அகதிகள் மீள்குடியேற்றம் ஆகியன தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐ.நா.செயலாளருக்கு உறுதிமொழி வழங்கி இருந்தார். இவை சம்பந்தமான ஒரு தொடர்ச்சியாகவே லியன் பஸ்கோவின் விஜயம் அமைகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply