முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானில் 300 பேர் மீள்குடியேற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 300 பேர் நேற்று தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டனர். வவுனியாவில் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த இவர்கள் விசேட பஸ்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். 93 குடும்பங்களைச் சேர்ந்த 295 பேர் ஒலுமடு, தட்சடம்பன் மற்றும் அம்பகாமம் ஆகிய பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.
இதேவேளை, 356 குடும்பங்களைச் சேர்ந்த 1080 பேரை இந்த வாரம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 5 கிராம சேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி மாங்குளம், பனிச்சங்குளம், அம்பகாமம் ஏ௯ வீதிக்கு மேற்கே இன்பபுரம், ஏ௯ வீதிக்கு மேற்கே திருமுருகண்டி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply