அமைச்சர் பீரிஸுக்கு எதிரான பிரேரணை: 107 வாக்குகளால் தோற்கடிப்பு

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 139 வாக்குகளும், ஆதரவாக 32 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம், ஐ.தே.கட்சியினால் அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை 107 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நண்பகல் ஒருமணிக்கு பாராளுமன்றம் கூடியபோது நம்பிக்கையில் லாப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply