சட்டவிரோத அகதிகளுக்கு எதிராக விரைவில் புதிய சட்டம் : கனடா

கனடாவிற்குள் புகும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க வரைவில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். கனடாவிற்குள் நுளையும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 492 இலங்கையர்களுடன் கடந்த ஓகஸ்ட மாதம் கனடாவை சென்றடைந்த சன்.சி கப்பல் அங்கு மேற்குக் கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்திற்கு மாற்றப்பட்டது. கனடாவை சென்றடைந்த இக்கப்பல் முதல் தடவையாக இடம் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைத் தமிழர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் புதிய கப்பல் மொன்றியல் கனடாவின் மொன்றியல் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கப்பல் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொறக்கோவில் இருந்து சென்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பலில் உள்ள 9 தமிழர்கள் கைது செய்யப்பட்டிப்பதை கனேடிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply