தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கபட்டது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகம் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று திறந்து வைக்கபட்டது. கொழும்பு பம்பலபிட்டி ரிட்ரிக் வீதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிகழ்வு இன்று காலை 9.30 அளவில் இடம்பெற்றது. நிகழ்வில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதேவேளை, அதன் பின்னர் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டமைப்பின் புதிய கட்டடத்தில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply