நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பு விசேட அறிக்கை தயாரிப்பு
அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட அறிக்கையொன்றினை தயாரித்துள்ளது. நேற்று முன்தினம் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்த அறிக்கையினை தயாரித்துள்ளன.
அடுத்த வாரம் அளவில் இந்த அறிக்கை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் கொழும்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி ரிட்ரீட் அவனியூவில் நேற்றுக்காலை புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி.க்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம். சரவணபவான், எம்.ஏ. சுமந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். புதிய அலுவலகத்தில் நேற்று கூட்டமைப்பின் செயற்குழு கூட்டமும் இடம் பெற்றது. இதில் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply