இலங்கைக்கு சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணை சிறந்ததாகும்
யுத்தக் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு முன் செல்லும் அபாயம் தோன்றியுள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்தே இந்த அபாயம் தோன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்றமை சிறந்ததாகும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply