வட மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்களை கூட்டமைப்பு கோராது
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எதிர்வரும் 4 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன் போது, கவனம் செலுத்தப்படும் என அரசாங்க உயர்மட்ட தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையின் போது, 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை வட மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்களை கூட்டமைப்பு கோராது என தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply