13 வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஒரு அரசியல் தீர்வல்ல : மாவை
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக தமிழ் மற்றும் முஸ்லீம் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர், அந்த இணக்கப்பாடுகளை அரசாங்கத்திற்கு சமர்பிக்க உள்ளதாகவும் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஒரு அரசியல் தீர்வல்ல எனவும் அதற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கத்திற்கு செல்ல வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கல்முனையில் வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவம் மக்களின் இடங்களை கைப்பற்றியுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவைக் கூட கவனத்தில் கொள்ளாவது அந்த காணிகளை உரியவர்களுக்கு வழங்காது அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இந்த விடயங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சு நடத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன் போது, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை மக்களிடம் கையளித்து, அவர்களை அங்கு மீளகுடியேற்றி, அந்த மக்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுத்தல், இராணுவத்திடம் சரணடைந்த இளைஞர்கள், யுவதிகள், காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு அரசாங்கம் நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் எழுத்துமூலமான பதிலை வழங்கியுள்ளது. அதனை அமுல்படுத்துமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அத்துடன் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பேசும் மக்களின் பிரதானமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஜனநாயக நாட்டில் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஆட்சி முறைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply