புகுஷிமா அணுமின் நிலையத்தில் 4வது அணுஉலையில் வெடிப்பு

ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கடல்நீரை செலுத்த முடியாமல் போனதால் அணு உலையின் இரும்புக் கொள்கலன் உருகி மிகப்பெரிய கதிர்வீச்சு தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் 4வது அணுஉலை வெடித்துள்ளது. பூகம்பத்தால் ஜப்பான் அணுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டடுள்ளன. அணுஉலையில் வெப்பம் அதிகரித்து கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புகுஷிமா பகுதியில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதேநேரம் 2ஆம் யூனிட் அணுஉலையில் கடல் நீரை செலுத்த அணுமின்நிலைய விஞ்ஞானிகள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. அணுஉலைக்குள் கடல்நீரை செலுத்த வேண்டும் என்றால் அதனுள் இருக்கும் கதிரியக்க நீராவியை முதலில் வெளியேற்ற வேண்டும்.
அதன் வால்வில் பிரச்னை ஏற்பட்டதால் நீராவியை வெளியேற்ற முடியவில்லை. இதனால் வெகுநேரம் அணு உலையில் நீர் இல்லாமலே யுரேனியம் உருகி அதிகஅளவு வெப்பத்தை வெளிப்படுத்தியது. ஒருவழியாக அணுஉலையின் வால்வை இன்று அதிகாலை திறந்து நீராவியை வெளியேற்றியபின் கடல்நீர் செலுத்தப்பட்டது.

ஆனால் அணுஉலையில் போதிய அளவு கடல்நீர் நிரம்பவில்லை. இந்த நிலை நீடித்தால் அணு உலையில் வெப்பம் அதிகமாகி இரும்புக்கலனே உருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 4ஆவது அணுஉலை பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னையை சமாளிக்க முடியாமல் ஜப்பான் அரசு அமெரிக்காவிடம் தொழில்நுட்ப உதவி கேட்டுள்ளது. இதையடுத்து 2 நிபுணர்களை அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

அணுஉலையில் வெடிப்பால் கதிர்வீச்சு தாக்கம் அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 30 கி.மீ சுற்றளவில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் நாடோ கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply