கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை : வெள்ளிக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மூன்றாம் கட்டப் பேச்சுகளில் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்தே பேசப்படும். அத்துடன் கடந்த மாதம் இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுகளில் அரசு உறுதியளித்தபடி தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர்கள் வவுனியா பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படாதது குறித்தும் அரசதரப்பின் கவனத்துக்குக் கொண்டு வரப்படும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் சட்டத்தரணி எஸ்.கனகேஸ்வரனும் கலந்துகொள்வார்.அரச தரப்பில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சிரேஷ்ட அமைச்சர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, சச்சின்வாஸ் குணவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply