நுரைச்சோலை அனல்மின் நிலையம்: ஜனாதிபதியால் நேற்று அங்குரார்ப்பணம்
புத்தளம் நுரைச்சோலையில் 455 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து முதற்கட்ட மின்சாரம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் தேசிய மின் இணைப்புக்கு வழங்கப்பட்டது.நேற்று மாலை நுரைச்சோலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 300 மெகாவாட் மின்சாரத்தினை தேசிய மின் இணைப்புக்கு உத்தியோகபூர்வமாக வழங்கும் நடவ டிக்கையை ஆரம்பித்து வைத்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகள் 2007ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோ கபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.இதன் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக, 455 அமெரிக்க டொலர் நிதி செல விடப்பட்டுள்ளதுடன் 5,300 மில்லியன் டொலர் தேசிய ரீதியில் முதலீடு செய் யப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply