பிரிட்டனை நோக்கிச் செல்லும் ஜப்பானின் அணு உலை கதிர்வீச்சு!

ஜப்பானின் அணு உலைகளில் இருந்து வெளியாகிய கதிர்வீச்சு பிரித்தானியாவை நோக்கிச் செல்வதாகவும், இதன் துணிக்கைகள் ஐரோப்பாக் கண்டத்தின் வான் பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐஸ்லாந்து நாட்டு அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளனர். ஜப்பான் அணு உலைகளினால் எதுவித கதிர்வீச்சு கசிவு அபாயமும் தமது நாட்டுக்கு வராதென பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேற்படி தகவலானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, ஜப்பானின் புகுஷிமா, இபராகி, டொச்சிஜி, கன்மா பிரதேச மாகாணங்களில் இருந்து பால் மற்றும் சில உணவுப்பொருட்களைத் தமது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

இவை கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply