விக்ரமபாகு கருணாரட்ன தாக்கபட்டமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்க வேண்டும்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நவ சம சமாஜக் கட்சி பொதுச்செயலாளர் கலாநிதி.விக்ரமபாகு கருணாரட்ன தாக்கபட்டமை தொடர்பில் இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாததற்கு பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்க வேண்டும் என ஒருசில அமைப்புகள், முன்னணி சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணியினர் ஒன்றிணைந்து வழங்கிய பொது மனு நாளை பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.
 
கடந்த டிசம்பர் 7ஆம் திகதி நவ சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி.விக்கிரமபாகு கருணாரட்ன அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சரத் குணரட்னவின் புதல்வரான சுரேஷ் குமார் குணரட்னவினால் தாக்கப்பட்டார் என அடையாளம் காணப்பட்ட போதும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் அவருக்கு எதிராக இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த மனுவினை நாளைய தினம் புறக்கோட்டை ரயில்நிலையத்திற்கு முன்பு நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பின் போது பொலிஸ்மா அதிபரிடம் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வழங்கவுள்ளது.
 
சட்டத்தரணியான சந்திரபால குமாரஹே மற்றும் எஸ்.ஜீ புஞ்சிஹேவ அவர்களுடன் சந்தியா எக்னெலிகொட, மஹிந்த தேவகி, தர்மசிறி லங்காபெலி, எம்.கே.சிவாஜிலிங்கம், வி.திருநாவுக்கரசு, அஜித் ரூபசிங்க மற்றும் பிரேமபால ஹேவபாதகே ஆகியோரே இந்த பொது மனுவினை முன்வைத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply