தமிழ் மக்களை தமிழ் அரங்கம் மறக்காது : சிவாஜிலிங்கம்

தமிழ் கட்சிகளின் அரங்கம் எப்போதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை மறந்துவிடப்போவதில்லை என தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசிவரும் நிலையில், அரசுடன் பேசப்பட்டுவரும் விடயங்கள் அனைத்தும் தமிழ் கட்சிகளினால் நியமிக்கப்பட்ட அறுவர் கொண்ட செயற்குழுவிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, தமிழ் மக்களை எந்த நிலையிலும் தமிழ் அரங்கம் கைவிட்டுச் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply