ஜெயலலிதாவும் கருணாநிதியும் இன்று வேட்பு மனு தாக்கல்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தனது சொந்த ஊரான திருவாரூரில் வியாழனன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 12வது முறையாக சட்டமன்றத் தேர்தல்களில் அவர் போட்டியிடுகிறார். திருவாரூரில் உள்ள, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அலைக்கற்றை பிரச்சினை பற்றி கேட்டதற்கு, ”நீங்கள்தான் அதைப் பெரிதுபடுத்துகிறீர்கள்” என்றார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் தனது வேட்பு மனுவினை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தனது கட்சியான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
திமுக மிக்சி அல்லது கிரைண்டர் என்றால் ஜெயலலிதாவோ ஃபேன், மிக்சி, கிரைண்டர், அனைத்தும் இலவசம் என்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும், என்றும் அவர் வாக்குறுதியளித்தார்.
ஜெயலலிதா அறிவித்த வேறு சில சலுகைகள்
-ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.
– வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.
– குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
– நடமாடும் மருத்துவமனைகள் மூலம் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்.
– வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.
– கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.
– நடுத்தர மக்களுக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் 40 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
– +1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
– பத்து மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அரசு, தனியார் மாணவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.
– பள்ளி மாணவ, மாணவியருக்கு வருடத்திற்கு 4 செட் சீருடை மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.
– அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக நீட்டிக்கப்படும்.
– ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவித் தொகை ரூ. 12,000 வழங்கப்படும்.
– 58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.
– ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு ரூ. 25,000 நிதியுதவியுடன், அரை பவுன் தங்கம் இலவசமாக அளிக்கப்படும்.
அவரும் தனது தேர்தல் பிரச்சாரத்தினை ஸ்ரீரங்கத்திலிருந்து இன்று துவக்கினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply