இலங்கை அகதிகள் தமிழகத்திலேயே வாழமுடியும் : ஜெயலலிதா
இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கௌரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். திருச்சியில் 11 மணிக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுதாக்கல் செய்துவிட்டு செய்தியாளருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு தரமான மருத்துவ வசதி, கல்வி உதவிகள், சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply