உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க சாட்சியமளிக்க மாட்டார்

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சாட்சியமளிக்க மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சாட்சியமளிக்காத காரணத்தினால் இறுதி அறிக்கையை தயாரிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்பட்ட போதிலும், அந்த நோக்கங்களை குறித்த ஆணைக்குழு நிறைவேற்றவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதனால் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கான பல மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும் அதில் பயனில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அரசாங்கம் அறிவித்த போதிலும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு பூர்த்தியாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் எதிர்வரும் மாதத்தில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தமது கட்சித் தலைவர்கள் இந்த மாதம் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதனால் எதிர்வரும் மாதத்தில் சாட்சியமளிப்பார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அசன் அலி மற்றும் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply